Home » Flash News » கருணாநிதியை இன்று சந்திக்கிறார் ரஜினி

கருணாநிதியை இன்று சந்திக்கிறார் ரஜினி

சென்னை, ஜன.3:தனிக்கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற இருக்கிறார்.

கடந்த 31-ந் தேதி ரசிகர்கள் சந்திப்பின்போது ரஜினி காந்த், தான் அரசியலுக்கு வரவுள்ள தாகவும், விரைவில் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்த லில் 234 தொகுதிகளிலும் போட்டி யிடப்போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது புதிய கட்சி தொடங்குவதற் கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ரஜினி பல்வேறு தரப் பினரையும் சந்தித்து பேசி வருகிறார்.

நேற்று முன் தினம் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து பேசினார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார். இந்நிலை யில் இன்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

இரவு 7.30 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கருணா நிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகவும், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவும் ரஜினி, கருணாநிதியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*