Home » Flash News » மலேசியாவில் சந்தித்து பேச முடிவு ரஜினிக்கு கமல் ஆதரவா?

மலேசியாவில் சந்தித்து பேச முடிவு ரஜினிக்கு கமல் ஆதரவா?

சென்னை, ஜன.2: ரஜினிகாந்த் தனிக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் கடந்த மாதமே கமலஹாசனை சந்தித்து ஒப்புதல் பெற்றதாகவும், வரும் 6-ந் தேதி மலேசியாவில் இருவரும் மீண்டும் சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனிக்கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை டிசம்பர் 21-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். புத்தாண்டு தினமான நேற்று புதிய வெப்சைட் தொடங்கினார். அடுத்த சில மணி நேரத்திலேயே ஏராளமா னோர் இந்த வெப்சைட்டை திறந்ததால் இது முடங்கியது. பின்னர் மீண்டும் திறக்கப்பட்டபோது ஏராளமானோர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

தனது புதிய திட்டத்தை செயல் படுத்த தொழில்நுட்பம் மற்றும் நிதி மட்டுமே போதாது என்றும் ரஜினி கருதுவதாகவும், சரியான சிந்தனையுள்ளவர்களையும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களையும் வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே தொழில்நுட்ப குழுவுக்கு அடுத்ததாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ரஜினி தனிக்குழுவை அமைத்து அந்த குழுவினர் செயல்படத்தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. ரூ.1 கோடி வரை செலவிட தகுதி படைத் ததாகவும், அதே நேரத்தில் செலவிடும் பணத்தை திரும்ப பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது என்றும், நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் கூறப்படும் நிலையில் தொகுதிக்கு ஒரு கோடி செலவிடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தப் பணம் பிரச்சாரம் மற்றும் தேர்தல் செலவுக் காக மட்டுமே என்றும், வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் ரஜினியின் வட்டாரம் கூறுகிறது.
இதனிடையே கட்சியின் பெயர், கொடி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது பற்றிய அறிவிப்பை பொங்கல் அன்று ரஜினி வெளியிடு வார் என்றும், அவரது சகோதரர் சத்தியநாராயணா கெய்க்வாட் கூறியுள்ளார்.

ரஜினிக்கு முன்பாகவே நடிகர் கமலஹாசன் கட்சி தொடங்குவது பற்றி ரஜினியுடன் ஆலோசனை நடத்தினார். அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறிய அவர் கட்சி பற்றிய எந்த அறிவிப்பை யும் வெளியிடவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் கமலஹாசனை ரஜினிகாந்த் சென்னையில் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பின் போது ரஜினியின் புதிய கட்சி அறிவிப்புக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு ஆகிய இரு படங்களை முடிக்க வேண்டியது இருப்பதால் கமலஹாசன் அவகாசம் கேட்டு இருப்பதாகவும் தெரிகிறது.தற்போது வெளிநாட்டில் இருக்கும் கமலஹாசன் வரும் 6-ந் தேதி மலேசியாவில் ரஜினிகாந்தை மீண்டும் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.மலேசியாவில்ந டைபெறும் சந்திப் புக்கு பிறகு இரு நடிகர்களும் அரசியலில் ஒன்றாக பயணிக்கப்போகிறார்களா? அல்லது தனித்தனியே பயணிப் பார்களா? என்பது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் கருணாநிதி-எம்.ஜிஆர், கருணாநிதி-ஜெயலலிதா காலத்தைப்போல் இனி மோதல் இருக்காது என்றும், நட்பு ரீதியிலான அரசியலே இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*