Home » அரசியல் » 9 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் கட்சி பதவி பறிப்பு

9 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் கட்சி பதவி பறிப்பு

சென்னை,ஜன.2: சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்கி ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது வருமாறு:-

காஞ்சிபுரம் மத்திய, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கோதண்டபாணி, வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் பொறுப்பிலும், குடியாத்தம் தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் சி. ஜெயந்தி பத்மநாபன்.

கடலூர் கிழக்கு மாவட்டம், விருத்தாசலம் நகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைச்செல்வன், தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் கே.கதிர்காமு.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் மாரியப்பன் கென்னடி,ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் முத்தையா.

தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுந்தரராஜ், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் உமாமகேஸ்வரி, இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*