Home » தமிழ்நாடு » டாக்டர் ஸ்டிரைக்கால் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

டாக்டர் ஸ்டிரைக்கால் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை, ஜன. 2: தமிழகத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கி உள்ளதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் தனியார் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் தொடர்ந்து மருத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைந்து நிரப்பபட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்திய மருந்துவ கவுன்சில் குறித்து பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு பல்வேறு தருணங்களில் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். தமிழக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அரசிடம் அனுமதி கோரி ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சிகிச்சை, அறுவை சிகிச்சை மேற் கொள்ளளவார்கள். இதனால் மருத்துவர்கள் வேலை நிறுத்ததால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*