Home » Flash News » ரசிகர்களுக்கு நன்றி கூறிய நயன்தாரா

ரசிகர்களுக்கு நன்றி கூறிய நயன்தாரா

சென்னை, ஜன.1:தனது வாழ்க்கையை அர்த்தமானதாக மாற்றிய ரசிகர்களுக்கு அன்பும் நன்றியும் என நடிகை நயன்தாரா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்கள் அன்பால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நேர்மையான நிபந்தனையற்ற அன்பு இன்னமும் இருக்கிறது என்பதை நீங்கள்தான் உணர வைத்திருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை அழகானது என்பதை மீண்டும் மீண்டும் நீங்கள்தான் உணர்த்துகிறீர்கள்.

நீங்கள் என்மீது செலுத்தும் அன்புக்கு நான் செய்யக்கூடியது எல்லாம் பொழுதுபோக்கு படங்களோடு அறம் போன்ற பொறுப்பான படங்களிலும் நடிப்பதே ஆகும்.உங்கள் அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன். உங்கள் இதயங்களில் எனக்கு சின்னதாக ஓரிடம் அளித்தமைக்கு அன்பும் நன்றியும். 2018 உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*