Home » Flash News » ரஜினிக்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள்

ரஜினிக்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள்

சென்னை, ஜன.1:போயஸ் கார்டனில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அரசியல் களைகட்ட தொடங்கி உள்ளது.

அரசியல் பற்றிய அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் முதல் முறையாக தமது இல்லத்திற்கு வந்த தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் கடந்த ஓராண்டு வரை அரசியல் நடவடிக்கையின் மையப் புள்ளியாக இருந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், தொண்டர்கள் ஆகியோர் படையெடுப்பால் போயஸ் கார்டன் பரபரப்பாக இருந்து வந்தது.

இதன் காரணமாக பல அடுக்கு பாது காப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து போயஸ் கார்டன் தனது அரசியல் முக்கியத்து வத்தை இழந்தது. பாதுகாப்பு ஏற்பாடு கள் தளர்த்தப்பட்டதால் போயஸ் கார்டன் பதற்றத்தையும் பொலிவை யும் இழந்து காணப்பட்டது.
அதே போயஸ் தோட்டத்தில் மற்றொரு தெருவில் ஜெயா பிறந்தநாளில் ரஜினிகாந்த் குடியிருந்தபோது ஜெயலலிதாவுக்கு இருந்த பாதுகாப்பு காரணமாக அவரது ரசிகர்கள் அதிக அளவில் குவிய முடிய முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப் புக்கிடையே ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று அறிவித்தஉடன் மீண்டும் போயஸ் கார்டன் பழைய பொலிவை அடைய ஆரம்பித்துள்ளது.

தனது பிறந்தநாள், புத்தாண்டு போன்ற நாட்களில் ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த், அரசியல் அறிவிப்புக்கு பின்னர் இன்று அவர் தனது இல்லத் தில் இருந்தார். அவரது ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக ரஜினி இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். வேட்டி-ஜிப்பா அணிந்து வீட்டிற்கு வெளியே வந்து ரஜினி தனது ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*