Home » Flash News » ஆர்.கே.நகரில் நாளை பிரச்சாரம் ஓய்கிறது

ஆர்.கே.நகரில் நாளை பிரச்சாரம் ஓய்கிறது

சென்னை, டிச.18: ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக, பிஜேபி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் தலைவர்கள் தீவிர ஓட்டுவேட்டையாடினார்கள். டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தீவிர பிரச்சாரத்துக்கு இடையே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதிமுக மீது தினகரனும், திமுகவும் புகார் கூறினார்கள். தினகரன் பணமும், குக்கரும் கொடுக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா நேற்று வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் கட்சிகளின் புகார்களை அவர் கேட்டறிந்தார்.

உச்சகட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியோடு ஓய்கிறது. 5 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. வெளி மாவட்டங்களை
சேர்ந்தவர்கள் வெளியேறும்படி உத்தரவிடப்படுவார்கள். நாளை மறுநாள் 21-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட இருக்கும் இவிஎம் எந்திரங்களின் பட்டியல் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் கார்த்திகேயன் சென்னை ராணி மேரி கல்லூரிக்கு சென்றார். வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*