Home » Flash News » ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா?

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா?

சென்னை, டிச.17:ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பணப் பட்டுவாடா நடப்பது பற்றிய புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் இன்று காலை அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று மாலையில் ஆங்காங்கே பணப்பட்டு வாடா நடப்பதாக புகார்கள் எழுந்தது. சாஸ்திரி நகர், விநோபா நகர், நேதாஜி நகர், காசிமேடு, ஆர்.கே.நகர் 2துவ தெரு, புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர், மூப்பனார் நகர் உள்ளிட்ட இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று காலை கொருக் குப் பேட்டை யில் செல்வி என்ற பெண் பணப் பட்டு வாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து அவரை கொருக் குப்பேட்டை போலீசார்
விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இவரை விடுவிக்க கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆர்.கே.நகர் நிலவரம் குறித்து விக்ரம் பத்ரா, ராஜேஷ் லக்கானி, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்து பேசினர். அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் ஆகியோர் அதிகாரிகளை சந்தித்தனர்.

திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும், பிஜேபி சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், தினகரன் அணி சார்பில் வெற்றிவேல் மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிகளும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.இதன் பின்னர் தம்பிதுரை கூறுகையில், எதிர்க்கட்சியினர் வீண் புகார்களை கூறி ஆளுங்கட்சியினரை தாக்குகிறார்கள். நாங்கள் நல்ல திட்டங்களை செயல்படுத்துவதால் பணப் பட்டுவாடா செய்ய அவசியம் இல்லை என்றார்.

மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஆர்.கே.நகரில் கோடிக்கோடியாக பணத்தை கொட்டினாலும் அதிமுக டெபாசிட் வாங்க முடியாது. தேர்தலை ரத்து செய்யாமல் எங்கள் கோரிக்கை களை ஏற்று, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பில் வலியுறுத்தினோம் என்றார்.

பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், குக்கர் போன்ற பொருட்கள் வாங்காளர்க ளுக்கு விநியோகிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.ஊழல், வன்முறை தலைவிரித்தாடும் இந்த தேர்தல் தேவையில்லை. நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்தியே பயன் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்து இருக்கிறோம் என்றார்.

தினகரன் தரப்பில் வெற்றிவேல் கூறுகையில், தேர்தலை ரத்து செய்வது எங்களது நோக்கமல்ல. ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்த தற்கான ஆதாரங்களை வீடியோவாக தாக்கல் செய்து இருக்கிறோம் என்றார்.அனைத்து கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகு தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும என்றும் தெரிகிறது. பணப்பட்டுவாடா புகார் அதிகரித்தால் தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.பிரச்சாரம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*