Home » Flash News » ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு: மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை

ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு: மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை

டெல்லி, டிச.16: நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி பரத் பர்ஷார் இன்று தீர்ப்பளித்தது.ஜார்கண்ட் மாநில முதல்வராக மதுகோடா 2006-2008 வரை பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் பெரும் ஊழல்நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் மதுகோடாவுக்கு 3 சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தார். மற்றும் ஜார்கண்ட் முன்னாள் தலைமை செயலாளர் ஏ.கே.பாசு, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, மதுகோடாவின் தனி உதவியாளர் விஜய் ஆகியோருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்கள் ராஜ்காரா வடக்கு நிலக்கரி சுரங்கத்தை கொல்கத்தாவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுகோடா உள்ளிட்டவர்கள்கள் நீதிமன்றம் 2 மாதம் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.ஜார்கண்ட் மாணவர் சங்க தலைவராக இருந்த மதுகோடா, ஆரம்பத்தில் பிஜேபியில் இருந்தார். தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை என்பதால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜார்கண்ட் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து சுயேட்சையாக தேர்வு பெற்ற இவர் முதல்வராக பொறுப்பேற்றார். 2006-ம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரி ஊழல் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*