Home » Flash News » இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜாவா, டிச.16:  இந்தோனேஷியாவில் நள்ளிரவில் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதில் 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குலுங்கிய வீடுகள் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இரவு முழுவதையும் அவர்கள் வீதிகளிலேயே கழித்தனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் ஒருவரும் 80 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. சுனாமி எச்சரிக்கை கடலுக்கடியில் சுமார் 91 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*