Home » உலகம் » அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு இந்திய மாணவர் படுகாயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு இந்திய மாணவர் படுகாயம்

சிகாகோ, டிச.10: அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கியால் சுட்டவரை அந்நாட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஹைதராபாத் பகுதியை சேர்ந்த முகமது அக்பர் என்ற நபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். அவர் சிகாகோவில் உள்ள ‘டேவ்ரி’ பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மர்ம நபர் ஒருவரால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு உள்ளார்.

சாலையில் அவர் சென்று கொண்டு இருக்கும் போது அவரை வழிமறைத்த அந்த மர்ம நபர், முகமது அக்பர் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதன்காரணமாக அவரது தொண்டை மற்றும் கன்னங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது.

தற்போது இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவரை சந்திப்பதற்காக இவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணம் தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*