Home » தமிழ்நாடு » திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூர், டிச.7:  திருவள்ளூர் அருகே கடந்த 30 ஆண்டுகளாக நீடித்திருந்த கால்வாய் அக்கிரமிப்புகளை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.

திருவள்ளூர் அருகே நத்தம்மேடு கிராமத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் பொதுப்பணித்துறை துரையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றரை கி.மீ தொலைவுள்ள கால்வாய் வழியாக 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரிக்கு சென்றடையும்.

அங்கிருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும். இந்த ஏரியின் மூலம் 500 எக்க்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் கடந்த 30 ஆண்டுகாலமாக மேற்படி 10 முதல் 20 மீட்டர் வரையில் உள்ள ஒன்றரை கி.மீ தொலைவுக்கு கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த கால்வாய் வீட்டு மனை விற்பனையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலைகளாகவும் சுற்றுச்சுவர் மற்றும் வீடுகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்தும் மறைக்கப் பட்டிருந்தது.

இதனால் ஒவ்வொரு பருவ மழையின் போதும் நத்தமேடு கிராமத்தில் உள்ள பாலாஜி நகர் , ராகவேந்திரா நகர், தணிகாசலம் நகர் , பெருமாள்புரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் கலெக்டர் எ. சுந்தரவல்லி உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் கால்வாய்களை அமைக்க வருவாய்த் துறைக்கும், பொதுப் பணித்துறைக்கும் உத்தரவிட்டார்

இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாபு உல்லிட்டூர் வரைபட உதவியுடன் ஆய்வு மேற் கொண்டனர். அதைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகாலமாக 31 வீடுகள் மற்றும் வெளி அமைத்து நிலைபெற்றிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

தொடந்து பெரிய ஏரியில் இருந்து தாங்கல் ஏரி வரையில் 1800 மீட்டர் தொலைவுக்கு மீண்டும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து பாதுகாக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகையும் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*