Home » குற்றம் » மயிலாப்பூரில் பூட்டிய வீட்டில் 22 சவரன் நகை திருட்டு

மயிலாப்பூரில் பூட்டிய வீட்டில் 22 சவரன் நகை திருட்டு

சென்னை, டிச.7: மயிலாப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மயிலாப்பூர் பாளையம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சீத்தாலட்சுமி (வயது 79).இவரது மகன் அமெரிக்காவில் இருப்பதால் சீத்தாலட்சுமி தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று காலை தி.நகரில் வசிக்கும் அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு சீத்தாலட்சுமி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.

மேலும் பீரோவில் இருந்த 22 சவரன் நகை திருடப் பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் கொடுத்த புகார் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்ம
ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*