Home » அரசியல் » நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : அதிமுக ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : அதிமுக ஆலோசனை கூட்டம்

சென்னை, டிச.7: வரும் 15-ந் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கட்சி சார்பில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக அதிமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் வரும் 9-ந் தேதி சென்னையில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 15ந்தேதி தொடங்கி ஜனவரி 5ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் குறியாக உள்ளன.

இந்த கூட்டத்தொடரில் முக்கிய சில முடிவுகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. வரும் 9ந்நேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எம்பிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்பிகள் ஆளும் பிஜேபி அரசுக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்து இணக்கமாக நடந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இதில் அதிமுக எம்பிகள் தமிழக அரசின் நிலைப்பட்டை பின்பற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிஜேபி நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு அளிப்பது குறித்தும் எம்பிகள் உடன் ஆலோசனை செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் ஆர்கே நகரில் தேர்தலில் அவர்களது பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*