Home » குற்றம் » பெண் காதை அறுத்து நகை பறிப்பு

பெண் காதை அறுத்து நகை பறிப்பு

சென்னை, டிச.7: பெரவல்லூர் ஜவகர் நகரை சேர்ந்தவர் கஸ்தூரி ( வயது 56). இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் நுழைந்த மர்மநபர், கஸ்தூரி அணிந்திருந்த 7 சவரன் நகையை கத்திமுனையில் கொள்ளையடித்து சென்றார்.

அத்துடன் விடாமல், கஸ்தூரியின் காதை அறுத்துவிட்டு சுமார் ஒரு சவரன் மதிப்புடைய காதணியையும் பறித்து சென்று தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள பெரவல்லூர் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*