Home » குற்றம் » தண்டவாளத்தில் தங்க நகைகள் : துப்புதுலங்கியது

தண்டவாளத்தில் தங்க நகைகள் : துப்புதுலங்கியது

சென்னை, டிச.7: பேசின் பிரிட்ஜ் ரெயில் தண்டவாளம் அருகே புதரில் புதைக்கப்பட்ட 50 சவரன் நகை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பாரிமுனை அருகே மண்ணடி, மூர் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபர்வகள் இக்ராம் – உமுல் அபிபா (வயது 42) தம்பதியினர். இவர்கள் கடந்த 4-ம் தேதி காலை வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு மதியம் 1.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு உள்ளே சென்று பர்த்தபோது, வீட்டிலிருந்த 65 சவரன் நகை கொள்ளைப்போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மூர் தெருவில் உள்ள கேமிரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் அதில், எதுவும் பதிவாகவில்லை. உடனே, அருகிலுள்ள தெருவிலுள்ள கேமிரா பதிவை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அதில், மர்மநபர் ஒருவர் மாடி வழியாக வீட்டினுள் சென்று பையுடன் வெளிவந்த காட்சி பதிவாகியிருந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மர்மநபர் குறித்த தகவல் கிடைத்தது. இதன்பேரில், கண்ணகி நகரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் லாரன்ஸ் (வயது 22), பாலு (வயது 21), ஆகாஷ், அகிஸ் ஆகிய 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அடிப்படையில், பேசின் பிரிட்ஸ் ரெயில் நிலைய தண்டவாளம் அருகே புதைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். சென்னை கோட்டை ரெயில் நிலைய பிளாட் ஃபாரத்தில் தங்கி குப்பை பொறுக்கும் வேலை பார்த்து வருவதாகவும், அப்படியே வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தை முழுவதுமாக செலவு செய்தால் சந்தேகம் வரும் என்பதால் பாதியை செலவழித்துவிட்டு மீதியை பிளாஸ்டிக் கவரில் போட்டு புதரில் புதைத்துவிட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக
போலீசார் தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*