Home » சென்னை » கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை?

கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை?

சென்னை, டிச.7: கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை சந்தையை சுகாதாரம் கருதி பராமரிப்பு பணிக்காக மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

கோயம்பேடு சந்தையில் தற்போது 3100க்கும் அதிகமான கடைகள் உள்ளன. காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது. எந்த நேரத்திலும் லாரிகள் வருவதும், போவதுமாக இருக்கிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் கழிவுகள் தேங்கி சந்தை வளாகம் முழுவதும் குப்பைகூழமாக காட்சி அளிக்கிறது.

சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பது குறித்து மொத்த விற்பனை கமிட்டியிடமும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும ஆணையத்திடமும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் கோயம்பேடு சந்தைக்கு சென்று பார்வையிட்டார். சிஎம்டிஏ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். நாள் ஒன்றுக்கு சுமார் 150 டன் காய்கறி கழிவுகள் சேருவதால் அதை அகற்றுவது சிரமமாக இருக்கிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப் பட்டதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*