Home » Flash News » விஜயகாந்த் சென்னை திரும்பினார்

விஜயகாந்த் சென்னை திரும்பினார்

சென்னை, டிச.7:மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோல், இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 28ஆம் தேதி சென்றார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருந்தார். இந்தப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.இந்நிலையில் 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின் விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*