Home » தமிழ்நாடு » திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மண்வள தினவிழா : கலெக்டர் தலைமை

திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மண்வள தினவிழா : கலெக்டர் தலைமை

திருவள்ளூர், டிச.7: திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மண் வள தினவிழா கலெக்டர் எ. சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் பூண்டி வட்டார விவசாயிகளுக்கு பாரதபிரதமரின் தேசிய மண் வள அட்டை இயக்கத்தின் கீழ் மண் ஆய்வு செய்து உரப்பரிந்துரை செய்யப்பட்ட மண் வள அட்டைகளை வழங்கியதுடன் தக்கைப்பூண்டு விதைகளையும் வழங்கினார்.

வேளாண் சார்ந்த பொருட்களின் கண்காட்சியில் மாவட்டத்தின் மண் வகைகள்,களர், உவர் மற்றும் அமில மண் வகைகள், பசுந்தாள் உரங்களான வேம்பு, புங்கம், கிளிரிசிடியா, தக்கைப் பூண்டு தழைகள், விதைகள், நுண்நூட்டசத்து உரங்கள், மண்புழு, உரம், உயிரினபூச்சிக்கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் புளுரெசனஸ் நுண்ணுயிர் உரங்களான அசோலா, அசோஸ்பைரில்லம், திரவரைசோமியம், திரவ பாஸ்போ பாக்டீரியா, பயிர்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளுக்கான படங்கள் முதலியவை இடம் பெற்றிருந்தன.

மேலும் ஐபிஎல் உர நிறுவனம் மெட்ராஸ் பெரிடிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றம் ஸ்பிக் உர நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் இயற்கை வழி பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும்வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகள் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து கலெக்டர் கூறும்போது,தற்போது வடகிழக்கு பருவமழையால் கிடைத்துள்ள நீர் வளத்தை முறையாக பயன்படுத்தி மண் ஆய்வு செய்து மண் வளத்தை பேணி பாதுகாத்து மனித வளம் காப்போம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*