Home » இந்தியா » மைசூர் அரச குடும்பத்திற்கு ஆண் வாரிசு

மைசூர் அரச குடும்பத்திற்கு ஆண் வாரிசு

மைசூர், டிச.7:மைசூர் அரச குடும்பத்திற்கு ஆண் வாரிசு பிறந்திருப்பது அரச குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மைசூரை சுதந்திரத்திற்கு முன் ஆட்சி செய்த உடையார் குடும்பத்தின் வாரிசான யதுவீர் கிருஷ்ண டத்தா சாம்ராஜ்ய உடையாரின் மனைவி திரிஷிகா தேவிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு 9.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், அக்குழந்தை 3 கிலோ எடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர்
சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதால் குழந்தை பிறந்த விவரத்தை வெளியிட வேண்டாம் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் அரச குடும்பத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

1330 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை உடையார் வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். 600 ஆண்டுகள் பழமைமிக்க உடையார் அரச குடும்பத்தின் 27-வது மகாராஜாவாக 2015 மே 28-ல் நியமிக்கப்பட்டார். இவர் ராஜஸ்தானை சேர்ந்த துங்காபூர் அரச குடும்பத்தை சேர்ந்த திரிஷிகாவை 2016-ல் திருமணம் செய்து கொண்டார்.கர்நாடகத்தில் மைசூரு பகுதியில் கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டியது உடையார் ஆட்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*