Home » Flash News » ஆதார் கெடு மார்ச் வரை நீட்டிப்பு

ஆதார் கெடு மார்ச் வரை நீட்டிப்பு

புதுடெல்லி, டிச.7:அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்க இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் மொபைல் போன் சேவையை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கெடு பிப்ரவரி 6-ந் தேதி என்பது தொடர்ந்து நீடிக்கும் என்று அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.

ஆதார் அட்டையை கட்டாயப் படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அமர்வு முன் இன்று வங்கி கணக்கு மற்றும் மொபைல் போனுடன் ஆதாரை இணைக்காவிட்டால் தொடர்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பொது மக்கள் பதட்டத்தில் உள்ளனர் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தனர். இந்த மனுவுக்கு மத்திய அரசு தரப்பில் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*