Home » Flash News » கவர்னருடன் மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு

கவர்னருடன் மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு

கன்னியாகுமரி, டிச.7:கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நேரில் பார்வையிட்டார். மீனவ பிரதிநிதிகள் அவரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

நேற்று நெல்லையில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த தமிழக கவர்னர் பன்வாரிலால் இன்று கன்னியாகுமரி சென்றார். குளச்சல், சுசீந்திரம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளுக்கு சென்று ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் அளித்த மனுக்களை அவர் ஏற்றுக்கொண்டார். குளச்சல் லோபஸ் மண்டபத்தில் மீனவ பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்கள். பங்குதந்தை எட்வின் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்கள்.

ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கவர்னரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவசர காலங்களில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். மீனவர்களுக்கு விசை காட்டும் சாதனங்களை வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவர்னரிடம் அளித்தார்கள். அவர்களது கோரிக்கைகளை உரிய மேலிடத்தில் எடுத்துச்சென்று அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று பன்வாரிலால் உறுதி அளித்தார்.

முன்னதாக கன்னியாகுமரியில் மீனவர்கள் பேரணியாக சென்றனர். சின்னத்துறை, காப்புக்காடு ஆகிய இடங்களில் குடும்பத்தோடு ஊர்வலமாக சென்று குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*