Home » அரசியல் » தேர்தல் அதிகாரியை மாற்ற திமுக கோரிக்கை

தேர்தல் அதிகாரியை மாற்ற திமுக கோரிக்கை

சென்னை, டிச.6: ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கூறினார்.

அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம். அந்த அடிப்படையில் தேர்தல் அதிகாரி நிச்சயமாக மாற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றார்.

இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுத்து நேர்மையான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் அதிகாரி கேட்கிறார் என்பது நிரூபணமாகி உள்ளது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*