Home » சினிமா » என்னுடைய நாயை காணோம்:திரிஷா

என்னுடைய நாயை காணோம்:திரிஷா

சென்னை, டிச. 6:நடிகை திரிஷா தான் தத்தெடுத்து வளர்த்த வந்த நாயை காணோம் என கூறியுள்ளார். மேலும் இந்த நாயை கண்டுப்பிடித்து தருபவர்களுக்கு
ரூ. 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா 10 வருடங்களை தாண்டி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா மட்டும் அல்லாமல் சில சமூக விஷயங்களையும் அர்ப்பணிப்போடு செய்து வருகிறார். முக்கியமாக இவர் விலங்குகள் நலனில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் உச்சக்கட்டமாக ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களிடம் கடுமையான கண்டனங்களை பெற்றார். நாய்கள் வளர்ப்பில் ஆர்வம் உள்ள திரிஷா தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வந்தார். நாய்கள் தத்தெடுப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு அளித்தும் வந்தார்.

இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் மஃப்பின் என்ற செல்ல பிராணியை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த நாய் அண்ணா நகர் டவர் பார்க் அருகே காணாமல் போனதாகவும் கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தகவல் தெரிந்தவர்கள் 9840194596 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*