Home » சினிமா » விநியோகஸ்தர் சங்க தேர்தல்

விநியோகஸ்தர் சங்க தேர்தல்

சென்னை, டிச.6: வரும் 24-ம் தேதி நடைபெற இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகதஸ்ருமான ஞானவேல் ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.

இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஞானவேல் ராஜா பேசியதாவது.

இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன்.

இதை தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். நேற்று முன்தினம் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அங்கு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு போட்டியிடுகிறேன்.

எங்களுடைய விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. டிசம்பர் 24 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது.

எங்களுடைய அணியில் தலைவர் பதவிக்கு நானும், துணைத்தலைவர் பதவிக்கு கே ராஜன், துணை செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம், செயலாளர் பதவிக்கு நேசமணி, பொருளாளர் பதவிக்கு ‘மெட்டி ஒலி’ சித்திக் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.

இதைத் தவிர வேறு பதவிகளுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதையும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*