Home » சினிமா » ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ‘மம்மி’

ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ‘மம்மி’

சென்னை, டிச.6: ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இளம் இயக்குனர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் கதாநாயகியாக பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க ஏ.இ.வேணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*