Home » Flash News » தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் குறைப்பு

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் குறைப்பு

சென்னை, டிச.5:தியேட்டர்களில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி, சிறப்பு நிலை நகராட்சி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் கார், ஆட்டோக்களுக்கு ரூ.20 கட்டணமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறப்பு நிலை நகராட்சி தவிர உள்ள இதர பிரிவு நகராட்சிகளில் கார், ஆட்டோக்களுக்கு ரூ.15-ம், இரு சக்கர வாகனத்துக்கு ரூ.7-ம் வசூலிக்க வேண்டும்.

பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கார், ஆட்டோக்களுக்கு ரூ.5-ம், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.3-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். 3 பகுதிகளிலுமே சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*