Home » சினிமா » விஜய்யின் 25 ஆண்டு திரை பயணம்

விஜய்யின் 25 ஆண்டு திரை பயணம்

‘என்னையும் என் மனைவியையும் வாழவைத்த உங்கள் பொன்னான கரங்களில் இன்று என் மகன் விஜய்யின் எதிர்காலத்தை ஒப்படைக்கிறேன். அவனையும் அன்போடு அணைத்து நெஞ்சாரா வாழ்த்த வேண்டும் என்று வேண்டுகிறேன்’ என்ற எஸ்ஏ. சந்திரசேகரின் அறிவிப்போடு தொடங்கும் நாளைய தீர்ப்பு படத்தில் கையில் தம்புல்சோடு உடற்பயிற்சி செய்த படி அறிமுகமானவர் நடிகர் விஜய். அதன் பின் எஸ்ஏசி வேண்டியதை போன்றே அவரை அன்போடு அறவணைத்துக்கொண்டனர் சினிமா ரசிகர்கள்.

நாளைய தீர்ப்பு படத்தில் வந்த விஜய்யை பார்த்த அனைவரும் கேலி செய்தனர். ஆனால் 4 ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ந்து விஜய் 7 படங்களில் நடித்தார். அதில் 4 படங்கள் அவரது தந்தை இயக்கியவை. அவை பெரிய வரவேற்பை பெறாத நிலையில் 1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி வெளியாகிறது பூவே உனக்காக. அந்த படம் தந்த பெரும் வெற்றி விஜய்யை அனைவருக்கும் பிடித்த நடிகர் என்ற இடத்தை பிடிக்கிறார்.

பின்னர் வெளியான லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இளைஞர்கள் இடையே விஜய்க்கு தனி இடத்தை பிடித்து தந்தன. விஜய்யின் 25வது படம் கண்ணுக்குள் நிலவு 2000ல் வெளியானது. அதே வருடம் வந்த குஷி பெரும் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து காதல் படங்களில் நடித்து ரொமாண்டிக் ஹீரோவாக திகழ்ந்த விஜய் 2003-ல் திருமலை, 2004ல் கில்லி என செம ஆக்ஷன் படத்தில் நடித்தார். அது வெளிவந்து பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது. ரூ. 50 கோடி வசூலான அந்த படத்தின் மூலம் ரொமாண்டிக் ஹீரோ டூ மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை பெற்றார் விஜய். தொடர்ந்து மதுர, திருபாச்சி, சச்சின், போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற போது மீண்டும் ஒரு தொய்வு.

பின்னர் 2007ல் பிரபுதேவா இயக்குநர் அவதாரம் எடுத்த போக்கிரி படத்தில் நடித்தார். அது மீண்டும் உத்வேகத்தை தந்தது. ஆனால் 2007 முதல் 2010 வரை அவருக்கு தோல்வி காலமாகவே இருந்தன. அதிலும் விஜய்யின் 50வது படமான சுறா மோசமான விமர்சனங்களை சந்திதத்து. அதன் பின் 2011ல் காவலன் வெளியாக தான் இழந்த இடத்தை பிடித்தார் விஜய். அதன் பின் வேலாயுதம், நண்பன் படங்கள் அந்த இடத்தை உறுதி செய்தன.

2012ல் ரூ. 100கோடி வசூல் சாதனை படைத்த முதல் விஜய் படமான துப்பாக்கி வெளியாகிறது. அடுத்த ஆண்டு தலைவா படத்தில் நடித்தார். அந்த படத்தில பெயர் முதல் கொண்டு அனைத்தும்
சர்ச்சைக்குள்ளாது. அன்று தொடங்கிய சர்ச்சை இன்று வரை நீடிக்கிறது. அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து கத்தி படத்திலும் எதிர்த்து பல வசனங்களை பேசினார் விஜய். நடுவில் வந்த பேண்டசி படமான புலி கூட சர்ச்சையில் இருந்து தப்பவில்லை.

விஜய் நடந்தால் செய்தி, பார்த்தால் செய்தி என்றானது. கடைசியாக விஜய் படத்தில் வெளியான மெர்சில் சர்ச்சைகளின் உச்சக்கட்டம். விமர்சனங்களை தாண்டி பெரும் வெற்றியை பெற்றது மெர்சல். தொடர்ந்து 25 வருடங்களாக மக்கள் மனதில் இடம் பிடிப்பது சாதாரண ஒன்றல்ல. இவர் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து பல நடிகர்கள் வந்து தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் போக விஜய் தனது இளையதளபதி இடத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*