Home » சினிமா » காஜல், சமந்தா, பிரனிதா உடன் மகேஷ்பாபு ஆட்டம்

காஜல், சமந்தா, பிரனிதா உடன் மகேஷ்பாபு ஆட்டம்

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத் மற்றும் சத்யசீத்தால வெங்கட்ராவ் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் தயாராகிவருகிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாகவும், நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, மிக்கி ஜே.மேயர் இசை அமைக்கிறார். வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு பணியை ஏ.ஆர்.கே.ராஜராஜா மேற்கொள்ள ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.

படம் பற்றி ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது. அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை ஆகும். படத்தில் காஜல், சமந்தா, பிரனிதா ஆகியோருடன் மகேஷ்பாபு ஆடி பாடி நடத்துள்ளார் என்றார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*