Home » உலகம் » 6,000 கார் டயர் பஞ்சர்:பலே நபர் கைது

6,000 கார் டயர் பஞ்சர்:பலே நபர் கைது

பாரிஸ், டிச.4:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்திய நபர் பாரிஸில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 6 வருடமாக மர்ம நபர் ஒருவர் கார்களில் ஊசியால் குத்தி பஞ்சர் செய்து இருக்கிறார். இந்த ஆறு வருடங்களில் மட்டும் 6,000 க்கும் அதிகமான கார்களுக்கு இவர் பஞ்சர் செய்து இருக்கிறார். இவர் மீது 1,100க்கும் அதிகமான நபர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் போலீஸ் இவரை தீவிரமாக தேடி வந்தது. இந்த 6 வருடமாக அவர் இணையம் முழுக்க வைரல் ஆகி இருந்தார். பலரும் அவர் மீது கோபமாக கருத்து தெரிவித்து இருந்தனர். சீரியல் கில்லர் என்பது போலவே ‘சீரியல் பஞ்சரர்’ என்று பெயர் வைத்து இருந்தனர். போலீசுக்கு இவரை பிடிப்பது குதிரை கொம்பாக இருந்தது.

இந்த நிலையில் இவர் நேற்று கைது செய்யப்பட்டார். நேற்று பாரிஸின் முக்கியமான ஒரு சாலையில் இவர் காருக்கு பஞ்சர் செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டார். தற்போது இவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனக்கு பஞ்சர் போடுவது ஆனந்தமாக இருந்தது. ஊசியால் குத்தும் போது சந்தோசமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பஞ்சர் வேலைக்கு அவர் நிறைய திட்டங்கள் போட்டு இருப்பதுதான் கொடுமையானது. இதற்காக தனி நோட் வாங்கி எந்த தெருவில் எப்போது பஞ்சர் போடலாம், எப்படி சிசிடிவியில் சிக்காமல் பஞ்சர் செய்யலாம் என்றெல்லாம் அவர் திட்டம் போட்டு செயல்பட்டுருக்கிறார். இதனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல என கருதும் போலீசார், தற்போது அவரது திட்டங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*