Home » உலகம் » தற்கொலைப்படை தாக்குதல் :6 பேர் பலி

தற்கொலைப்படை தாக்குதல் :6 பேர் பலி

காபூல், டிச.4:ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் மோட்டார் பைக்கில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹர் மாகாண தலைநகரான ஜலலாபாத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வெளியே நேற்று மாலை மோட்டார் பைக்கில் வந்த தீவிரவாதி, கூட்டமான மக்கள் பகுதி அருகே வந்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தார்.

இந்த கோர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்னர், மைதானத்தில் உள்ளே அரசு ஆதரவு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*