Home » உலகம் » விஷம் குடித்த ராணுவ தளபதி மரணம்

விஷம் குடித்த ராணுவ தளபதி மரணம்

ஆம்ஸ்டர்டாம்,நவ.30: கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் போஸ்னிய ராணுவத்தின் கமாண்டராக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேரை போர் குற்றவாளிகள் என அறிவித்தது.

இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் நெதர்லாந்தின் தி ஹோக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று கோர்ட்டில் ஆஜரான ஸ்லோபோதன் ப்ரால்ஜக், நீதிபதி கண்முன்னே தான் குப்பியில் கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு, நான் குற்றமற்றவன் என்றும் தான் விஷம் குடித்துள்ளதாகவும் நீதிபதியிடம் கூறியுள்ளார்.

மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நீதிமன்றத்தை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*