Home » தமிழ்நாடு » இதய துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம்

இதய துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம்

கோவை, நவ.28: கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மின்னலைகள் மூலம் இதயத் துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறியதாவது:-
எலெக்ட்ரோபிசியோலஜி என்பது இதய மின்னோட்ட முறையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் தொடர்பான இதயச் சிகிச்சையின் ஒரு பிரிவாகும்.

இவ்வகை நோய்கள் சீரற்ற இதயத் துடிப்புக் கோளாறுகள் என்று பொதுவாக அழைக்கப் படுகிறது. இன்றைய அதிவேக வாழ்க்கை முறையினால், இதயத் துடிப்புக் கோளாறுகளும் வேகமாக அதிகரித்துவருகின்றன.

எனவேதான், கே.எம்.சி.எச் இதயசிகிச்சை மையம் இவ்வகை நோய்களுக்காக, தனிப் பிரிவை தொடங்கி, நோயாளியின் தேவைக்கு ஏற்ப திறமையான மருத்துவர் களையும், துணைமருத்துவப் பணியாளர்களையும் கொண்டுள்ளது. மெதுவான இதயத் துடிப்பைச் சரிசெய்வதற்கு, நிரந்தர பேஸ் மேக்கர் கருவி (அதிநவீன எம்.ஆர்.ஐ-செய்யும் வசதி கொண்ட பேஸ் மேக்கர் கருவி) பொருத்தப்படுகிறது.

அதிவேக இதயத் துடிப்பைக் கொண்ட நோயாளிகளை சோதனை செய்து, அவர்களது தேவையை துல்லியமாகக் கணக்கிட, கதிர்வீச்சு அதிர்வெண் கொண்டு செயல்படும் அதிநவீன முறையும் பின்பற்றப்படுகிறது.

சீரான இதயத் துடிப்பை பாதிக்கும் மிகச் சிக்கலான நோய்களையும் கண்டறியும் வகையில் முப்பரிமாணத்துடனான முறை இங்குள்ள எலெக்ட்ரோ பிசியோலஜி துறையினால் கையாளப் படுகிறது.

தமிழகத்திலேயே மிக அதிக அளவில், சிக்கலான இதய அறுவைச் சிகிச்சைகளையும், மாரடைப்பைத் தவிர்ப்பதற்காக உடலின் உட்பொருத்து கருவிகள் முறையிலான சிகிச்சைகளையும் இந்த மையம் சிறப்பாக செயல்படுத்திவருகிறது.

இங்கு எலெக்ட்ரோபிசியோலஜி துறை ஆற்றும் அரும் பணி இப்போதைய காலத்திற்கு தேவை.
எனவே, கே.எம்.சி.எச் மருத்துவமனை நோயாளிகளுக்குத் இக்கால சூழ்நிலைக்கு கேற்ப சிகிச்சையை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதயத் துடிப்பை சீர்படுத்தினால் போதும், அனைத்துவகை தேவைகளையும் சரியான நேரத்தில் நிறைவேற்ற மின்னுடலியல் துறை என்றும் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*