Home » Flash News » 33 இடங்களில் மீண்டும் சோதனை

33 இடங்களில் மீண்டும் சோதனை

சென்னை, நவ.28: சசிகலாவின் உறவினர்களிடம் நடத்திய சோதனையை தொடர்ந்து இன்று அவர்களது பினாமிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களாக கருதப்படும் கம்பெனிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
சென்னையில் பெரம்பூர், திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 21 இடங்களிலும், பிற பகுதிகளில் 12 இடங்களிலும் என மொத்தம் 33 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நீடித்து வருகிறது.

சசிகலாவும், அவரது குடும்பத்தின ரும் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகார்களை தொடர்ந்து நவம்பர் 9-ந் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. வேளச்சேரியில் உள்ள ஜாய்ஸ் சினிமா, புதுச்சேரியில் ஆரோவில் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை மற்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகம் என மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சில நாட்கள் இடைவெளி விட்டு கடந்த 17-ந் தேதி போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உதவி யாளராக பணியாற்றிய பூங்குன்றனின் அறையில் சோதனை நடத்தப்பட்டு பென்-டிரைவ் மற்றும் லேப்-டாப்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பென்-டிரைவில் உள்ள தகவல்களை வருமானவரித்துறையினர் கடந்த 10 நாட்களாக ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் அதிரடி சோதனை யில் வருமான வரித்துறை அதிகாரி கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டனர்.
பெரம்பூர் மற்றும் திருவான்மியூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் நிறுவனத் திலும், இதன் உரிமையாளர்கள் சிட்டி பாபு, செந்தில் ஆகியோரது இல்லங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் கங்கா பவுண்டேஷன், பட்டேல் குரூப், மிலன் மார்க் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. முதலில் சத்யம் சினிமா நிறுவனத்தில் சோதனை நடத்தப் பட்டதாக வெளியான தகவலை வருமானவரித்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

ஏற்கனவே சசிகலா உறவினர் களிடம் நடத்திய  சோதனைக்கும், இன்று நடைபெறும் சோதனைக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை பற்றிய விவரத்தையும் உடனடியாக வெளியிடவில்லை. ஆனால் சத்யம் நிறுவனம் தனக்கு சொந்தமான ஜாய் சினிமாவை சசிகலா குடும்பத்தினருக்கு விற்பனை செய்தது தொடர்பான சரியான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அதை தொடர்ந்தே இன்றைய  சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இது தொடர்பாக ஏற்கனவே ஜாய் சினிமாவை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிடம் வருமான வரித்துறை விசா ரணை நடத்தியிருக்கிறார்கள். இதேபோல் இளவரசியின் மருமகன் ராஜராஜனிடமும் விசாரணை நடை பெற்றிருக்கிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் இன்றைய  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப் படுகிறது.

காஞ்சியில் ரெய்டு:
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே சீவிரம் பகுதியில் தினேஷ் பட்டேல் என்பவர் பத்மாவதி
சர்க்கரை ஆலை நடத்தி வருகிறார். இன்றுகாலை 7மணிக்கு இந்த ஆலைக்கு 8பேர்கொண்ட வருமான வரித்துறையின் அதிரடியாக உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோன்று இன்று சென்னையில் வசித்து வரும் தினேஷ் வீடு மற்றும் அவரது அலுவலங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஒரேநேரத்தில் தினேஷ் வீடு, அலுவலகங்கள் மற்றும்  சர்க்கரை ஆலைகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் ஏராளனமான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிகின்றன. மேலும் இந்த
சோதனையில் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*