Home » சினிமா » முருகதாஸ் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம்

முருகதாஸ் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம்

சென்னை, நவ.28:  விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்க உள்ள 62-வது படத்தில் அவர் இரண்டு கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். விஜய்-முருகதாஸ் கூட்டணி கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 8 தேசிய விருதுகள் பெற்ற ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்.

மேலும் ஒளிப்பதிவாளராக கிரீஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில்  சோலோ, அங்கமாலி டைரிஸ், கலி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர். மெர்சல் படத்தில் சிறிய கேரக்டர்களில் வந்து கவர்ந்த யோகிபாபு விஜயின் 62 படத்தில் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதாநாயகி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனவரியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*