w
Home » சினிமா » அன்புவின் மிரட்டலுக்கு அஜித்தும் தப்பவில்லை

அன்புவின் மிரட்டலுக்கு அஜித்தும் தப்பவில்லை

சென்னை, நவ.22: மதுரையில் வட்டிக்காரராக இருந்து தயாரிப்பாளராகவும், பைனான்சியராகவும் மாறிய அன்புச்செழியனின் மிரட்டலுக்கு ஜிவி முதல் அசோக்குமார் வரை பலியாகி உள்ளனர். இவரின் மிரட்டலில் இருந்து அஜித்தும் தப்பவில்லை.

தமிழ் திரையுலகை ஆட்டிப்படைக்கும் அன்புச்செழியன் பற்றிய பிளாஸ்பேக் இதோ… 2013-ம் ஆண்டு குடும்பத்துடன்
சுற்றுலா சென்ற ஜி.வெங்கடேஷ்வரன் என்னும் ஜிவி சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். வந்தவர் தன் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட அவரின் மரணத்தின் போதும் பைனான்சியர் மதுரை அன்பு பெயர் அடிபட்டது. அதன்பின் தயாரிப்பாளர் காஜாமைதீன் தற்கொலை முயற்சியின் போதும் அவரது பெயர் முனு முனுக்கப்பட்டது. சினிமா சார்ந்த கட்டப்பஞ்சாயத்துகளில் அவரது பெயர் அடிப்படும். ஆனாலும் எதுவும் முறையான புகாராகவோ, வெளிப்படையான குற்றச்
சாட்டாகவோ பதிவாகவில்லை.

2006-ம் ஆண்டு இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து அஜித் விலகினார். அப்போது கதை விவாதத்திற்கான செலவை அஜித் தரவேண்டும் என சென்னையில் ஒரு ஹோட்டலில் வைத்து அஜித்தை மதுரை அன்பு அப்போது மிரட்டியது பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பின்னர், 2011 ஆம் ஆண்டில், மதுரையில் தங்கராசு என்ற தயாரிப்பாளர் கொடுத்த புகாரில் வெளிப்படையாக இடம் பெற்றது. சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் படங்களை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்தவர் இவர். அன்புவிடம் இருபது லட்ச ரூபாய் வாங்கியதாகவும், அதற்காக வெற்றுப் பாத்திரங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார்.

வட்டியாக ஒரு கோடிக்கு மேல் கொடுத்தும் கடன் தீராமல் அன்பு தன்னை மிரட்டுவதாக புகார் அளித்தார். அப்போதைய மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் இவரை கைது செய்ய உத்தரவிட்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் நெருக்கமாக இருந்ததாகவும், பின் அதிமுக மேலிடம் நெருக்கம் எனவும் கூறி தொழிலை நடத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அழகிரியுடன் நெருக்கமாகவும் காட்டிக்கொள்வாராம்.
வழக்குகள் ஒரு புறம் நடந்தாலும், இவரிடம் கடன் வாங்காத தயாரிப்பாளரே இல்லை எனும் அளவுக்கு இவர் வளர்ந்து கொண்டே தான் இருந்தார். மதுரை அன்பு, தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் ஆனார். தனுஷ் நடித்த தங்கமகன், விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார்.

இயக்குனர் பாலாவுக்கும் இவருக்குமான நட்பு பிரபலமானது. சண்டி வீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாலா, எந்தப் படம் தயாரித்தாலும் என்னிடம் பேசாமல் தொடங்க மாட்டார், என் கருத்தைக் கேட்பார் என்று பேசினார் அன்புச்செழியன்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் கத்திச்சண்டை பட இசை வெளியீட்டிலும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார் அன்புச்செழியன்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர் மீதுதான் இன்று, பாலாவின் சீடரான சசிகுமார், தனது அத்தை மகனும், தனது கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவன இணை தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமாகி உள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*