Home » சினிமா » அசோக்குமார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

அசோக்குமார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை, நவ.22: தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர்  அசோக்குமார் உடலுக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் திரையுலகினர் அஞ்சில் செலுத்தினர்.

சென்னை வளசரவாக்கத்தில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அசோக்குமார் மனைவிக்கு இயக்குனர்கள் சசிகுமார், அமீர், சுசீந்திரன், நடிகர் பரணி மற்றும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்டோர் ஆறுதல் கூறியதுடன் அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரேதபரிசோதனை முடிந்து பகல் 11.30 மணி அளவில் அசோக்குமார் உடல் மதுரைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
மதுரை, கோமதிபுரம், அல்லிவீதி 6-வது மெயின் ரோட்டில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இன்று இரவு தகனம் செய்யப்பட உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*