Home » Flash News » 50 ஆண்டுக்கு பிறகு வெடிக்கும் எரிமலை

50 ஆண்டுக்கு பிறகு வெடிக்கும் எரிமலை

கரன்காசிம், நவ.22:இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள அக்வுங் என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பிற்பகலில் இருந்து வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த எரிமலையில் இருந்து 700 மீட்டர் உயரத்திற்கு புகை கிளம்பிய வண்ணம் இருப்பதால் அருகே வசிக்கும் சுமார் 1600க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.1963-ல் இதே வெடிமலை வெடித்து சிதறிய போது 1600 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த எரிமலை இன்னும் பெரிய அளவில் வெடிக்கவில்லை என்ற போதிலும், எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்பதால் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து புகை மூட்டமாக இருந்தால் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்படும். பசுபிக் கடலில் பூமியின் தட்டுகள் மோதும் நெருப்பு வளையம் பகுதியில் இந்தோனேஷியா அமைந்திருப்பதால் அடிக்கடி எரிமலை சீற்றமும், பூகம்பமும் ஏற்பட்டு வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*