Home » Flash News » தொண்டர்களின் உணர்வைதான் எதிரொலித்தேன்:மைத்ரேயன்

தொண்டர்களின் உணர்வைதான் எதிரொலித்தேன்:மைத்ரேயன்

சென்னை, நவ.22: அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்று தான் பதிவிட்டிருந்த எனது தனிப்பட்ட கருத்து அல்ல.பெரும்பாலான அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் தான் எதிரொலித்துள்ளேன் என்று மாநிலங்களவை எம்பி மைத்ரேயன் கூறியுள்ளார்.

அதிமுகவில் எடப்படி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகும் அந்த கட்சியில் சலசலப்பு நீடித்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அதிமுகவில் நடக்கும் சலசலப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலங்களவை எம்பி, மைத்ரேயன் தனது முகநூல் ஒரு கருத்தை
பதிவிட்டிருந்தார்.

அதில், ‘ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து, இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று பதிவிட்டிருந்தார். இதனால், அதிமுகவில் சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்துவதுபோல இந்தப் பதிவு இருந்தது.

மைத்ரேயனின் இந்த முகநூல் பதிவு குறித்து, மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், மைத்ரேயனின் முகநூல் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இரட்டை இலை சின்னத்துடனேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில், ‘நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்று தான் பதிவிட்டிருந்த எனது தனிப்பட்ட கருத்து அல்ல.பெரும்பாலான அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் தான் எதிரொலித்துள்ளேன்‘ என குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிமுகவில் சலசலப்பு மேலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*