Home » அரசியல் » ரணிலிடம் மோடி பேச வேண்டும்: வாசன்

ரணிலிடம் மோடி பேச வேண்டும்: வாசன்

சென்னை, நவ.21: தமாகா தலைவர் ஜி.கே வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மீனவக்குடும்பங்கள் மீன்பிடித்தொழிலை இழக்கின்ற சூழலில் அவர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ் விற்கே பொருளாதாரமின்றி பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.

குறிப்பாக கச்சத்தீவை மீட்பது குறித்தும் பேச வேண்டும். அது மட்டுமல்ல இந்தியா- இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சு வார்த்தை குறுகிய காலத்திற்குள் நடைபெற வலியுறுத்த வேண்டும். இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் வரை இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை எந்தவிதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடாது என்பதை அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும்.

ஏதோ பேச்சுக்கு மட்டும் இந்திய பிரதமர் அவர்கள் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசினால் போதாது. இப்பேச்சின் மூலம் இலங்கை பிரதமர் அவர்கள் இலங்கைக்கு திரும்பிய பிறகு மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

எனவே இலங்கை பிரதமர் அவர்களின் தற்போதைய இந்திய வருகையை இந்திய பிரதமர் மோடி நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு – தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு இலங்கை கடற்படையால் இனி ஒரு போதும் பாதிப்புகள் இருக்காது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஜிகே. வாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*