This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Sun Sep 23 18:35:27 2018 / +0000 GMT

முதல் பங்கு வர்த்தக தரகு நிறுவனம் 5 பைசா.காம்


சென்னை, நவ.21:  ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான 5பைசா கேபிட்டல் லிமிடெட் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ அமைப்புகளால் பட்டியலிடப்பட்ட முதல் கணினிவழி பங்கு வர்த்தக நிறுவனம் ஆகும்.

தேசியப் பங்குச் சந்தையில் இடம் பெறுவது குறித்த அறிவிப்பினை 5பைசா.காம் முறையாக அறிவித்துள்ளது. ஐ.ஐ.எஃப்.எல் பங்கு வர்த்தக நிறுவனத்தில் தற்போதைய பங்காளர்களுக்கு இப்புதிய 5பைசா.காம்-ன் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் 25:1 என்ற விகிதத்தில் விற்கப்படுகிறது.

இதன் தாய் நிறுவனமான ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் இந்நிறுவனத்திற்கான புதிய முதலீடாக ரூ.100 கோடியை ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது என்று அதன் நிறுவனர் மற்றும் தலைவரான நிர்மல் ஜெயின் கூறியுள்ளார்.
Post date: 2017-11-21 10:13:53
Post date GMT: 2017-11-21 10:13:53
Post modified date: 2017-11-21 10:13:53
Post modified date GMT: 2017-11-21 10:13:53
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com