Home » இந்தியா » டிஏவிபிக்கு புதிய தலைமை இயக்குனர்

டிஏவிபிக்கு புதிய தலைமை இயக்குனர்

புதுடெல்லி, நவ.21: மத்திய விளம்பரம் மற்றும் விஷûவல் பப்ளிசிட்டி (டிஏவிபி) பிரிவுக்கு தலைமை இயக்குனராக கன்ஷியாம் கோயலும், செய்திப்பிரிவுக்கு புதிய தலைமை இயக்குனராக இரா ஜோஷியும், நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:-
பத்திரிகை தகவல் மையத்தின் டைரக்டர் ஜெனரல் இரா ஜோஷி தூர்தர்ஷன் செய்தி பிரிவு டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்பதவியில் இருந்த வீணா ஜெயின் ஓய்வு பெற்று விட்டார்.

இதே போல் விளம்பரம் மற்றும் விஷûவல் பப்ளிசிட்டி டைரக்டர் ஜெனரலாக கன்ஷியாம் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த எஸ்தர் கார் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூர்தர்ஷன் செய்திப்பிரிவு டைரக்டர் ஜெனரலாக 2015 மே மாதம் நியமிக்கப்பட்ட ஜெயின் கடந்த ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றார்.
அதை அடுத்து அகில இந்திய வானொலியின் செய்தி பிரிவு தலைமை இயக்குனர் ஷிதான்ஷû கார் அந்த பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இப்போது
இரா ஜோஷி தூர்தர்ஷன் நியூஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூர்தர்ஷன் இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் செய்தி ஒளிபரப்பி வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*