Home » சென்னை » மேல்மருவத்தூரில் 24 ரெயில்கள் நின்று செல்லும்

மேல்மருவத்தூரில் 24 ரெயில்கள் நின்று செல்லும்

சென்னை, நவ.21: தைப்பூசம் விழா மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 24 ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேல்மருவத்தூரில் இதுவரை நின்று செல்லாத விரைவு ரெயில்கள் தைப்பூசம் விழா மற்றும் சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். வரும் 13-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

மலைக்கோட்டை, வைகை, பாண்டியன், பொதிகை, சாம்பர்க் கிரான்டி, திருக்குறள், மன்னை, லோக்மான்ய திலக்-மதுரை, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-மதுரை எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், உத்தரபிரதேச மாநிலம் மண்டுவாடி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஆகிய 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உட்பட 24 ரெயில்கள் இரு மார்க்கமாகவும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*