w
Home » குற்றம் » பெண் கொலை: மளிகை கடைக்காரர் கைது

பெண் கொலை: மளிகை கடைக்காரர் கைது

திருத்தணி, நவ.20: திருவாலங்காடு அருகே ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்துவீட்டைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர் மாரியப்பனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருவாலங்காடு அருகே லட்சுமி விலாசபுரம் ஏரிப்பகுதியில் புதர் மண்டி கிடக்கும் இடத்தில் தலையில்லாமல் பெண்ணின் உடல் கிடப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சி.பி சக்கரவர்த்தி, திருத்தணி டிஎஸ்பி .பாலசந்திரன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அப்துல் சர்தார், எஸ்.ஐ ராஜ்குமார் மற்றும் போலீசார் மற்றும் மோப்பநாய் ராம்போவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை துண்டிக்கப்பட்டு உடல் வீசப் பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த தலையில்லா பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளதுடன் அவரது தலையை தேடியபோது ஏரிக்கரை அருகே கண்டெடுத்தனர்.

பின்னர் கொலையான பெண் யார் என்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் கருகல்லைச்சேர்ந்த ராமச்சசந்திரன் மனைவி லட்சுமி என்கிற ரேவதி என தெரியவந்தது. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெண்ணின் மகன் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-
என்து தாய் ரேவதியை கடந்த 12ம்தேதி எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் மளிகைக்கடை நடத்தி வரும் மாரியப்பன் (வயது 37) என்பவர் வேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ள சிவன் கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். சென்ற என் தாய் திரும்பி வரவில்லை. பின்னர் பத்திரிகைகளில் பார்த்து தான் என் தாய் கொலை செய்யப்பட்டதை தெரிந்த கொண்டேன் என்று கூறி கதறினார். இதுகுறித்து மாரியப்பனை திருவாலங்காடு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவத்தன்று ரேவதி நகைகள் அணிந்து சென்றதாகவும் கோவிலுக்கு செல்வதாக கூறி ரேவதியை அழைத்துச்சென்று நகைக்காக கொலை செய்தாரா அல்லது கள்ளகாதல் விவகாரத்தால் நடந்த கொலையா என்றும் இந்த கொலையில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*