Home » குற்றம் » வங்கி அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு

வங்கி அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு

சென்னை, நவ. 20: தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ரூ. 174.53 கோடி வரை மோசடி செய்த ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த வங்கியில் ரூ. 174.53 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் இந்த வங்கியின் மேலாளர் தீக்ஷிடுலு, ஆடிட்டர் ராமசந்திரன், இணை மேலாளர் அனுஜ் ஷýக்லா ஆகியோர் தனியார் நிறுவனங்களுக்கு 2015ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் 6 நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கி தந்துள்ளனர்.

புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து பெரும் அளவு பணம் வெளி நாட்டிற்கு அனுப்படுவது குறித்து உரிய தகவல்களும் விசாரணையும் இன்றி வங்கி அதிகாரிகள் செயல்பட்டதும் இந்த கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தீக்ஷிடுலு, ராமசந்திரன், அனுஜ் ஷýக்லா, ஸ்கைலான்டர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பி. பாண்டியன், இவிஒய் மார்கெட்டிங் நிறுவனம் மற்றும் உரிமையாளர் பைசல் கான், ரிய்சன் என் ஹாலிடேஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பிரபு, கிரெப்ஸ் டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரமேஷ், ஜே. எச். மார்கெட்டிங் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஜவஹர் முகமது இப்ரஹிம், கோ ஸ்மார்ட் குலோபல் டிரேடிங் மற்றும் எஸ் கல்லீலூர் ரஹ்மான் ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*