Home » சென்னை » ஆர்.கே.நகர் தேர்தல் தாமதம் ஏன்?

ஆர்.கே.நகர் தேர்தல் தாமதம் ஏன்?

சென்னை, நவ.20: தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.

சென்னை ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதி க்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இத்தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மருது கணேஷும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த இரண்டு வழக்குகளையும் விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில், தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு இன்று முறையிடப்பட்டது. இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால்தான், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்விரு வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் கொடுத்தது எப்படி கட்சி தாவலாகும்? 18 எம்.எல்.ஏ. க்களும் உட்கட்சி ஜனநாயகத்தை எப்படி மீறினார்கள்? என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி வாதிட்டார்.

தமிழக சட்டமன்றத்தில் இருந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை உரிமை குழு நோட்டீஸ் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, டிடிவி. ஆதரவு அதிமுக சட்டமன்ற வெற்றிவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மனுக்கள் உள்ளிட்ட எட்டு வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*