Home » விளையாட்டு » அகில இந்திய கபடி போட்டி: வ.உ.சி. அணி சாம்பியன்

அகில இந்திய கபடி போட்டி: வ.உ.சி. அணி சாம்பியன்

தூத்துக்குடி, நவ.20: தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி வெற்றி வாகை சூடியது.

அகில இந்திய பெரிய துறை முகங்களின் விளையாட்டு கட்டுபாட்டு குழு மற்றும் வ.உ.சி. துறைமுக விளையாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகளின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந் தேதி துறைமுக பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இப்போட்டியில் வ.உ.சி. துறைமுக அணி சென்னை துறைமுக அணியை எதிர்கொண்டது. இறுதியாக வ.உ.சி. துறைமுக அணி 30-12 என்ற புள்ளி கணக்கில் சென்னை துறைமுக அணியை வீழ்த்தியது.

3-ம் இடத்திற்கான போட்டியில் விசாகப்பட்டின துறைமுகம் அணி, ஜஹகர்லால் நேரு துறைமுகம் அணியை 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இப்போட்டிகளில் வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஐ. ஜெயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி கோப்பைகளையும், பதக்கங் களையும் வழங்கினார்.

விழாவில் துணைத் தலைவர் சு. நடராஜன் மற்றும் கடலோர காவல்படை டிஐஜி எஸ்.பி. வெங்கடேஷ், மற்றும் துறைமுக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*