This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Wed Nov 21 17:47:12 2018 / +0000 GMT

மகேந்திராவின் புதிய ஸ்கார்ப்பியோ கார்


சென்னை, நவ.20: இந்தியாவின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மகேந்திரா அண்டு மகேந்திரா அதி வீச்சும் முழு வேகமும் கொண்ட ஆற்றலின் உந்து விசையாக உருவெடுத்துள்ளது ஆல் பவர்புல் ஸ்கார்ப்பியோ.

இதன் உயர் சக்தி, முறுக்கு விசை, உயர் செயல்பாடு பார்ப்போரை ஈர்க்கும் பொலிவு, சொகுசான பயணம் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மகேந்திராவின் புதிய ஸ்கார்ப்பியோ கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோ எஸ்3-யின் விலை ரூ.9.94 லட்சம் (எக்ஸ் ஷோரூம், சென்னை) மட்டுமே. இந்த கார் எஸ் 3, எஸ் 5, எஸ் 7 (120 பிஎச்பி), எஸ் 7 (140 பிஎச்பி), எஸ்.11 (140 பிஎச்பி), எஸ் 11 4 டபுல்யூ.டி-வுடன் 140 பிஎச்பி ஆகிய ஆறு வெவ்வேறு வகைகளில் கிடைக் கிறது.

இப்புதிய அறிமுகம் பற்றி மகேந்திரா அண்டு மகேந்திராவின் ஆட்டோ மோட்டிவ் பிரிவு தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், “2002-ல் ஸ்கார்ப்பியோ முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.

முதல் மகேந்திராவின் இலக்கு எல்லையை தாண்டி ஸ்கார்ப்பியோ எழுச்சி வேகம் பெற்றுள்ளது. தற்போது ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஸ்கார்ப்பியோ பெற்றுள்ளது மிகுந்த பெருமையளிக்கிறது” என்று தெரிவித்தார்.
Post date: 2017-11-20 10:14:09
Post date GMT: 2017-11-20 10:14:09
Post modified date: 2017-11-20 10:14:09
Post modified date GMT: 2017-11-20 10:14:09
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com