Home » இந்தியா » புதிய அம்சங்களுடன் ‘பீம்’ செயலி

புதிய அம்சங்களுடன் ‘பீம்’ செயலி

மும்பை, நவ.20: தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் பீம் என்னும் பெயரில் செயலியை அறிமுகம் செய்தது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான யு.பி.ஐ. மேடையை அடிப்படையாக கொண்டு செயல்படும் பீம் செயலி மூலம், வங்கிகள் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், அக்டோபர் மாதம், பீம் செயலியின் மூலமான பண பரிவர்த்தனை, 149% அதிகரித்து 76 மில்லியனாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பீம் செயலியின் வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. தனி நபர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு உதவும் அம்சங்கள், சமூக ஊடகம் அல்லது மேசேஜிங் சேவை மூலம் பயனாளிகள் மற்றவர்களுக்கு செயலியில் இணைய அழைப்பு விடுக்கும் வசதி, சிறு வர்த்தகர்கள் தங்கள் உதவியாளர்களை பணம் பெறக்கூடிய ஏஜென்ட்களாகவும் அமைத்துக் கொள்ளும் வசதி போன்ற பல்வேறு புதிய அம்சங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*