Home » Flash News » கவர்னருக்கு விரைவில் புதிய செயலர் நியமனம்

கவர்னருக்கு விரைவில் புதிய செயலர் நியமனம்

சென்னை, நவ.17: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு விரைவில் முதன்மை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட உள்ளார். 1084 பிரிவைச் சேர்ந்த அதிகாரியான இவர் தற்போது மாநிலங்கள் கவுன்சில் தலைமையகத்தின் ஆலோசகராக மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வருகிறார். கவர்னர் புரோஹித் அரசுத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில் கோவை மாவட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இதுபோன்ற ஆய்வை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கவர்னர் மாளிகை யின் விவகாரங்களை கவனிப்பதற் காக அவருக்கு தனிச்செயலாளர் நியமிக்கப்பட இருப்பது குறிப்பிடத் தக்கது.  இதற்கான நியமனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் நியமன குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உள்துறையில் பணியாற்றி வந்த ராஜகோபால் சர்ச்சைக்குரியவராக இருந்தார். அதனால் அவர் மின் நிதிக்கழகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது இவரை மீண்டும் தமிழக பணிக்கு அழைத்து கவர்னரின் முதன்மை செயலாளராக நியமிக்க இருப்பது வியப்புக்குரிய தாக இருப்பதாக ஐஏஎஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*